உள்ளூர் செய்திகள்

வேலூர் அணைக்கட்டு சாலையில் விவசாயி குடும்பத்துடன் மறியல் செய்த காட்சி.

பசுமை பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி குடும்பத்துடன் மறியல்

Published On 2023-04-01 14:37 IST   |   Update On 2023-04-01 14:37:00 IST
  • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
  • போக்குவரத்து பாதிப்பு

வேலூர்:

வேலூர் அப்துல்லாபுரத்தில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலையில் உள்ள இலவம்பாடியில் அந்த ஊராட்சியின் சார்பில் பசுமை பூங்கா அமைக்க முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் விவசாயம் செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பசுமை பூங்கா பணிகள் அந்த இடத்தில் தொடங்கப்பட்டது.அப்போது விவசாயி பழனி இந்த இடத்தை தனக்கு விட்டு தர வேண்டும் எனக் கூறி பணியை தடுத்து நிறுத்த முயன்றார்.

இந்த நிலையில் இன்று காலை பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் 10 பேர் இலவம்பாடியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூர் அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். போக்குவரத்து சீரானது.

தொடர்ந்து வருவாய் துறையினர் விவசாயி பழனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News