அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்த காட்சி.
ரூ.4.56 கோடியில் 16 பள்ளிகளில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி
- உபகரணங்கள் இலவசமாக கொடுப்பதாக துறை அதிகாரிகள் தகவல்
- பணியை நாளை முதல் ஒப்பந்ததாரர்கள் தொடங்கலாம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு, ஆகிய மலைப்பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டனர்.
மேலும் உண்டு உறைவிட பள்ளி கட்டினால் மலைப்பகுதியில் உள்ள 75 மாணவர்கள் அங்கு தங்கி படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அங்கு கட்டிடங்கள் கட்ட வேண்டும் என வட்டார பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.
மேலும் கீழ்கொத்தூரில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் அணைக்கட்டுக்கு வரும் அரசு பஸ்களில் மாணவர்கள் தொங்கியப்படியே வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூடுதலாக பஸ் இயக்க வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்பு வேளாண்மை துறையில் தற்போது மரக்கன்றுகள் வருகை தந்துள்ளது இதனை குறிப்பிட்ட 12 ஊராட்சிகளை சார்ந்த அனைத்து விவசாயிகளும் இலவசமாக பெற்று பயனடையலாம்.
தோட்டக்கலை சார்பில் நாட்டு காய்கறி விதைகள், உரம், பயிர் செழிப்பாக வளர்ச்சியடைய அதற்க்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக கொடுப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன் பேசுகையில் தற்போது அரசு ஒதுக்கிய நிதிகளில் ஊராட்சியில் செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 82 வகுப்பறைகள் கட்டிடங்களை கொண்ட 16 புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட ரூ. 4 கோடியே 56 லட்சம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை நாளை முதல் ஒப்பந்ததாரர்கள் தொடங்கலாம் என தெரிவித்தார்.