உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்த காட்சி.

மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும்

Published On 2023-06-23 14:48 IST   |   Update On 2023-06-23 14:48:00 IST
  • பனை மரங்கள் வெட்டுவதால் விவாசாயிகள் வேதனை
  • வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். 100 நாள் பணியாளர்களை விவசாய பணிக்கு ஈடுபடுத்த வேண்டும்.

பேர்ணாம்பட் ஏரியில் கலக்கும் நகராட்சி கழிவுநீர், தோல் தொழிற்சாலை கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனவிலங்கு மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேர்ணாம்பட்டில் விவசாயி மீது வனத்துறை போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

பனை மரங்கள்

பொது இடத்தில் உள்ள பனைமரங்களை சில காரணங்களுக்காக பொதுப்பணித்துறை அகற்றி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பனைமரம் வளர 30 ஆண்டுகள் வரை ஆகும். அவற்றை வளர்க்க அரசே பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இனி மாவட்டத்தில் பனை மரங்களை அகற்ற வேண்டும் என்றால் கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

குழு அமைத்து உரம், மருந்து, விதை வைப்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதிகமான விலைக்கு விற்பது தெரியவந்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News