உள்ளூர் செய்திகள்

காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் செய்த காட்சி.

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-07-26 14:55 IST   |   Update On 2023-07-26 14:55:00 IST
  • போலீசார் பேச்சுவார்த்தை
  • போக்குவரத்து பாதிப்பு

வேலூர்:

வேலூர் சைதாப்பேட்டை 25-வது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் நகர் பகுதியில் 2 மற்றும் 3-வது தெருக்கள் உள்ளன.இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட தாகவும், கூடுதல் நேரம் குடி நீர் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை குறைந்தநேரமே குடிநீர் வினியோகம் செய்யப்பட் டுள்ளது. அதனால் அதிருப்தி அடைந்த விநாயகர்நகர் பொதுமக்கள் காலி குடங்களுடன் பழைய முன்சீப் கோர்ட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது பொதுமக்கள், 15 நாட் களுக்கு ஒருமுறை வழங்கப் படும் குடிநீர் அத்தியாவசிய தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் நாங்கள் கடைகளில் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத் தும் நிலை உள்ளது.

எங்களுக்கு கூடுதல் நேரம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாநக ராட்சி அலுவலர்கள், நாளை (இன்று) காலை முதல் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News