உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் 13 கைதிகளுக்கு பரோல்

Published On 2023-11-08 13:21 IST   |   Update On 2023-11-08 13:21:00 IST
  • 3 நாட்களுக்கு வழங்கப்பட்டது
  • தீபாவளி பண்டிகையொட்டி நடவடிக்கை

வேலூர்:

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1.500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படை யில் சிறையில் பல பணிகளில் ஈடுபடுத்தப்ப டுகின்றனர்.

பரோல் அனுமதி குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டி கைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி, 40 கைதிகள் மனு அளித்தனர்.

இதில், முதல்கட்டமாக 13 கைதிகளுக்கு 3 நாட்களுக்கு பரோல் வழங்க சிறைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

கைதிகள் விரும்பும் நாட்களில் அந்த விடுமுறை அளிக்க பரிசீலனை செய்யப்படும். மேலும் மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News