- டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. பிடிஒக்கள் சுதாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.
இதில் தற்போது டெங்கு காய்ச்சலை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் வேளாண்மை துறை சார்பில் மண்வெட்டி, தென்னை கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் செந்தூரா கூறுகையில் 2 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு 70% மானியம் அதற்க்கு குறைவாக உள்ள நிலத்திற்கு 100% மானியத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
நெக்கினி மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர்ச்சி திட்டங்களை பற்றி எடுத்துறைத்து பேசினர்.