உள்ளூர் செய்திகள்

காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். கதிர் ஆனந்த் எம்.பி, கலெக்டர் குமரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.

காட்பாடியில் புதிய மகளிர் போலீஸ் நிலையம் திறப்பு

Published On 2022-06-16 16:01 IST   |   Update On 2022-06-16 16:01:00 IST
  • வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேலூர்:

தமிழகத்தில் இன்று 20 மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார். இதில் காட்பாடி போலீஸ் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையத்தை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்று திறந்து வைத்தார்.

இதனையடுத்து காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் கதிர் ஆனந்த் எம்பி குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டி.ஐ.ஜி ஆனி விஜயா,போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News