- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் பேபி (வயது 66). இவர் நேற்று மாலையில் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங் குவதற்காக வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அப்போது அவருடன் 12 வயது பேரனும் உடன் சென்றான். வேலூர் கோர்ட்டு அருகே சென்று ஆட்டோவில் செல்வதற்காக பேபி தனது பேரனு டன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையை, சாலை கெங்கையம்மன் கோவில் அருகே கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பேபி பலத்த காயம் அடைந்தார். சிறுவனுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இதைக்கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதலுதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பேபி அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில்
பேபி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.