உள்ளூர் செய்திகள்

நில அதிர்வால் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது குறித்து அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-11-10 09:55 GMT   |   Update On 2022-11-10 09:55 GMT
  • சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு
  • வருவாய் துறையினர் விசாரணை

பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் தரைக் காடு, குப்பைமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் சுற்றுப் புற கிராமங்களிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட் டும் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

பொது மக்கள் பீதிக்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதைதொடர்ந்து பேரணாம் பட்டு தாலுகா அலுவலகத் தில் நில அதிர்வை பதிவு செய்யும் சீஸ்மோகிராப் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பேரணாம்பட்டில் தரைக்காடு பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.25 மணியள வில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு வெடிச்சத்தம் போன்று சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. தரைக் காடு பகுதியில் வசிக்கும் முபாரக் என்பவரின் வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த நில அதிர்வு சில நொடிகள் நீடித்ததாக பொது மக்கள் கூறினர். நில அதிர்வினால் பொதுமக்கள் அதிர்ச் சியடைந்து பீதிக்குள்ளாகி வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்துதெருவில் நின்றனர்.

இது குறித்து தகவலறிந்த பேர ணாம்பட்டு வருவாய் ஆய்வா ளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News