உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-09-13 09:53 GMT   |   Update On 2023-09-13 09:53 GMT
  • மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும்
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவு

வேலூர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாநகர பகுதியில் ஆண்டுதோறும் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும்.

வழிபாடு முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க உதவி கலெக்டர் கவிதா, வேலூர் டவுன் டிஎஸ்பி திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர்வல பாதையை ஆய்வு செய்தனர்.

வேலூர் சைதாப்பேட்டை முருகர் கோவிலில் மெயின் பஜார் லாங்கு பஜார் அண்ணா கலையரங்கம் கோட்டை சுற்றுச்சாலை மாங்காய் மண்டி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை மற்றும் சிலைகள் கரைக்கப்படும் சதுப்பேரி ஏரி ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் கவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்ற வேண்டும். ஊர்வல பாதையில் தாழ்வான நிலையில் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News