உள்ளூர் செய்திகள்

சத்துணவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-11-20 08:50 GMT   |   Update On 2022-11-20 08:50 GMT
  • முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக புகார்
  • தரமற்ற முட்டைகள் சப்ளை செய்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுரை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த வாரம் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் ஒரு சில சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் இருந்ததாகவும், ஒரு சில முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ஊரக வளர்ச்சி துறை வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் அதிகாரி களுடன் தாழையாத்தம் ஊராட்சி, மேல்முட்டுகூர் ஊராட்சி, உள்ளி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட முட்டைகளை பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது சத்துணவு பணியாளர்களுக்கு தரமற்ற முட்டைகள் சப்ளை செய்யப்பட்டால் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கோ அல்லது வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News