- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் பள்ளி மாணவிகள், கிராம மக்கள் பங்கேற்ற ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் கே.சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கோ. துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் வி. கோமதி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்கள், ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து மாணவிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்கள், தொடர்ந்து ஊட்டச்சத்து மாத விழாவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் உதவி மைய அலுவலர் மணி சேகர், திமுக பிரமுகர்கள் ராஜ்கமல், ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.