உள்ளூர் செய்திகள்

மேல் மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி.மணிவண்ணன், டி.எஸ்.பி.திருநாவுக்கரசு ஆய்வு செய்த காட்சி.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு

Published On 2023-09-16 08:40 GMT   |   Update On 2023-09-16 08:40 GMT
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை
  • வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்

வேலூர்:

வேலூர் அடுத்த மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் ரூ 11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை நாளை மறுநாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் நிரந்தரமாக எத்தனை பேர் வசிக்கின்றனர் புதிதாக யாராவது தங்கி உள்ளார்களா எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்தனர்.

இதேபோல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் குடியிருப்புகள் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர்.

குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டர் முதல் அனைத்து இடங்களும் பலத்த சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட வீடுகளில் போலீசார் குறியீடு எழுதி வைத்தனர்.

இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், டி. ஐ. ஜி. முத்துசாமி உள்ளிட்டோர் பொது க்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News