உள்ளூர் செய்திகள்

வேலூர் பஸ் நிலையத்திற்கு புதிய பெயர் இல்லை?

Published On 2022-06-28 09:41 GMT   |   Update On 2022-06-28 09:41 GMT
  • தலைவர்களின் பெயரை சூட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
  • வளைவுக்கு அண்ணா நூற்றாண்டு என பெயர் சூட்டப்பட்டுள்ளது

வேலூர்:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதன்கிழமை திறந்து வைக்கிறார்.

புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டுமென சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் தற்போது வரை புதிய பஸ் நிலையத்திற்கு எந்தவிதமான பெயரும் சூட்டப்படவில்லை.

ஏற்கனவே செல்லியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயிலுக்கு அண்ணா நூற்றாண்டு வளைவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்த வளைவிற்கு வண்ணம் தீட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் முகப்பில் வேலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் என வண்ண விளக்குகளால் ஆன பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்கள் பெயர் இதுவரை சூட்டப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஒருவேளை நாளை விழாவில் புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்கள் பெயர் ஏதாவது சூட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags:    

Similar News