உள்ளூர் செய்திகள்

நகரும் படிக்கட்டுகள் அடிக்கடி நிறுத்தப்படும் அவலம்

Published On 2023-11-17 15:23 IST   |   Update On 2023-11-17 15:23:00 IST
  • காட்பாடி ெரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
  • காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக இயக்க வலியுறுத்தல்

வேலூர்:

காட்பாடி ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்படாமல் உள்ளது. கடந்த சில தீபாவளி விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர்.

2-வது நடைமேடை மற்றும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் இயக்கப்படவில்லை.

இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு லிப்ட் மட்டும் உள்ளது.

அதனை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டம் அதிகமாக சேரும்போது பயணிகள் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது அதுவும் இயங்க வில்லை. அடிக்கடி பராமரிப்பு பணி காரணமாக அதன்னை நிறுத்தி விடுகின்றனர்.

காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக நகரும் படிக்கட்டுகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News