உள்ளூர் செய்திகள்

வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மோர்தானா அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்

Published On 2023-02-22 15:02 IST   |   Update On 2023-02-22 15:02:00 IST
  • விவசாயிகள் போராட்டம்
  • வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்க வலியுறுத்தல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சங்கத்தின் பொருளாளர் ஜி.ரகுபதி,துணை செயலாளர்வெ ங்கடாஜலபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.நிர்வாகிகள் ஈஸ்வரன்,முனியம்மாள், மாணிக்கம்,தாமோதரன், சுனிதா,பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிலம்பரசன், குணசேகரன், கோட்டீஸ்வரன், பாண்டுரங்கன், குமார், பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சரவணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும். மோர்தானா அணையை சுற்றுலா தலமாக அறிவித்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும்.

யானை,காட்டுப்பன்றி சிறுத்தை,குரங்கு உள்ளிட்ட வனவிலங்கு தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும். மோர்தானா பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும். கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். சைனகுண்டா பகுதியில் நிரந்தர போலீஸ் நிலையம் அமைத்திட வேண்டும். வனவிலங்குகள் சரணாலயம் தொடங்கிட வேண்டும்.

மோடிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் வசதி செய்து மேம்படுத்திட வேண்டும். கொட்டமிட்டா அரசு மேல்நிலைக்கு பள்ளிக்கு இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை கட்டித்தர வேண்டும்.

மோடிகுப்பம் கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கொட்டமிட்டா ஆரம்பகிளை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும். கூடுதலாக வனத்துறை ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

வனப் பகுதியில் வனவிலங்குகளுக்காக குடிநீர் தொட்டிகள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News