உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பஜார் தெரு பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணிகள் நடந்தது.

சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவீடு

Published On 2023-02-17 10:28 GMT   |   Update On 2023-02-17 10:28 GMT
  • விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற ஏற்பாடு
  • வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரி தகவல்

ஒடுகத்தூர்:

ஒடுகத்தூர் பேரூராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு பகுதியில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டிள்ளனர்.

இதனால், பஸ் போக்குவரத்து மட்டுமின்றி வாகனங்கள் செல்ல கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இரண்டு தெருக்களிலும் 25 அடிக்கும் மேல் இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு செய்த பின் 15 அடி கூட இல்லாமல் உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

எனவே, சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முறையாக அளவிடு செய்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நடந்து முடிந்த கவுன்சிலர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கடிதத்தை வருவாய்த்துறையினரிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்த, மனுக்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக அளவிடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, தாசில்தார் ரமேஷ் ஆலோசனையின் பேரில் ஆர்ஐ நந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், சர்வேயர் திலீப்குமார் (பள்ளிகொண்டா பிர்கா), சர்வேயர் கிரிதரன் (ஒடுகத்தூர் பிர்கா) மற்றும் 8 கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரண்டு தெருக்களிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவிடும் செய்யும் பணிகளை தொடங்கினர்.

இப்பணிகள், முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News