உள்ளூர் செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில், கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தமிழக அரசின் அங்கீகாரத்தை, சக்தி அம்மா மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் மருத்துவமனை இயக்குனர் பாலாஜியிடம் வழங்கினர். அருகில் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் கீதா இனியன்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மையம் தொடக்கம்

Published On 2022-07-03 14:52 IST   |   Update On 2022-07-03 14:52:00 IST
  • ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு தமிழக அரசின் அங்கீகாரம்
  • சக்தி அம்மா, கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினர்

வேலூர், ஜூலை.3-

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா ஆசியுடன் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிக குறைந்த கட்டணத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில், மேலும் ஒரு மைல்கல்லாக, கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தினை, ஸ்ரீ சக்தி அம்மா மற்றும் தமிழக கவர்னர் ஆர் என் ரவி, ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜியிடம் வழங்கினர்.

இதுகுறித்து ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பாலாஜி கூறுகையில்:- ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சிறப்பான சிகிச்சையினை மிகக்குறைந்த கட்டணத்திலும் சிறப்பான முறையிலும் வழங்குவதில் முதன்மையான மருத்துவமனையாக விளங்கி வருகின்றது.

இம்மருத்துவமனிைல் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் செயல்பட்டு வரும் வேளையில், தற்போது கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லீரல் நோய்தொற்று, கல்லீரல் வீக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக் கப்பட்டவர்களும் இனி நம் வேலூர் மாவட்டத்திலேயே சிறப்பான சிகிச்சையினை பெற்று பயன்பெறலாம் என்றார்.

Tags:    

Similar News