உள்ளூர் செய்திகள்

மலைப்பகுதியில் 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை போலீசார் அழித்தனர்.

நீரோடையில் பதுக்கிய சாராய ஊறல்

Published On 2023-01-08 09:02 GMT   |   Update On 2023-01-08 09:02 GMT
  • 5 பேர் கும்பல் தப்பி ஓட்டம்
  • போலீசார் தேடி வருகின்றனர்

அணைக்கட்டு:

அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை, குண்ராணி மலைப்பகுதியில் நீர் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் நீரோடையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தேடிபார்த்தனர்.

பின்னர் நீரோடையின் அருகில் நீர் தேக்க பேரல்கள் இருப்பதை பார்த்தனர்.

அதனை நோக்கி செல்லும் போது அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் திடீரென தப்பி ஓடினர்.

இதனையடுத்து தீவிரமாக தேடி ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெள்ளம், பட்டைகள் கலந்து 9 பேரல்களில் ஊற வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய ஊறலை கீழே தள்ளி அழித்தனர். இதன்பின் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு இருந்த அனைத்து பொருட் களையும் தீயிட்டு கொளுத்தினர்.

தப்பி ஓடிய சாராய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News