உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

குடியாத்தத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-02 15:16 IST   |   Update On 2022-09-02 15:16:00 IST
  • வார விழா புறக்கணிப்பு
  • பணிக்கொடையைக உயர்த்த வலியுறுத்தல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர் சங்கத்தின் சார்பில் இன்சூரன்ஸ் வார விழா புறக்கணிப்பு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை சங்க தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் எம். குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் என். விஜயகுமார், ஏ.ஜி. ராதாகிருஷ்ணன், வி.மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எல்ஐசி முகவர் சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன், பாலாஜி சம்பத், ஈஸ்வரன் ஊழியர் நலச் சங்கத்தைச் சேர்ந்த இளங்கீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு முகவர்களுக்கு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News