குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்த காட்சி.
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கே.எம்.ஜி. கலையரங்கில் நடைபெற்றது.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் விழாத் தொடக்க அறிவிப்பினை அறிவித்து பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி இயக்குநர் நடராசன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையினைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் வாசித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், காவேரியம்மாள் விழாப் பேருரை நிகழ்த்தி 2016-2018 -ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அளவில் ஆங்கிலப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி பி.ஆஷிகா மற்றும் 2017-2019 ஆம் கல்வியாண்டில் கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த மாணவி எஸ்.திவ்யா ஆகிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கியும், 155 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-கற்றல்- கற்பித்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் காரணமாக மாணவர் ஆசிரியர் உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களைப் பாதிக்கும் சமூகக் காரணிகளை மனதில் கொள்ளாமல் மாணவர்களைக் குறை கூற கூடாது.
மாணவர்கள் செல்போனில் அதிக நேரத்தைச் செலவிடாமல் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். வாழ்க்கை என்பதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.
பெற்றோர்களுக்கு உரிய மரியாதையை பட்டம் பெற்ற நீங்கள் அளிக்க வேண்டும். மாணவர்களை நேசிக்கும் ஆசிரிர்யகளாக விளங்கவேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசியர்கள்.கே.சாந்தி, .எஸ்.செல்வகுமாரி, ஏ.எஸ்.அறிவுக்கொடி, வி.கலைவாணி, இளையராஜா, கவுதமன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.