உள்ளூர் செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழாயொட்டி வேலூர் காகிதப்பட்டறையில் நேற்று இரவு சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
- வேலூர் காகிதப்பட்டறையில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை ராதா ருக்மணி சமேத கிருஷ் ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறி யடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் திருவிழா நேற்று நடை பெற்றது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சறுக்கு மரம் ஏறினர். மேலும் ஒருவர் மீது ஒரு வர் ஏறி நின்று உறியடித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் அங்குதிரண்டு நின்று கண்டுகளித்தனர்.
முன்னதாக ஆற்காடுசாலையில் மின் விளக்கு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. வீடுகள் மற்றும் சாலையில் ஏராள மான பொதுமக்கள் நின்று தரிசனம் செய்தனர்.