உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

காட்பாடி, திருப்பதி, விழுப்புரம் ரெயில்கள் மீண்டும்இயக்கம்

Published On 2022-06-25 10:46 GMT   |   Update On 2022-06-25 10:46 GMT
  • வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது
  • எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம்

வேலூர் ஜூன்.25-

வருகிற 1-ந் தேதி முதல் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த திருப்பதி - காட்பாடி - விழுப்புரம் பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றி இயக்கப்படுகிறது.

திருப்பதி செல்லும் பக்தா்களுக்காகவும், வேலூருக்கு சிகிச்சைக்கா கவும், பணி நிமித்தமாகவும் வந்து செல்லும் பொது மக்களுக்காகவும் விழுப்புரம் - காட்பாடி - திருப்பதி இடையிலான பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதையேற்று காட்பாடி - திருப்பதி, விழுப்புரம் - திருப்பதி, காட்பாடி - விழுப்புரம் ரெயில்களை வருகிற 1-ந்தேதி தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலானது தினமும் மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும்.

பின்னா், திருப்பதிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பதி - காட்பாடி விரைவு ரெயிலானது அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 4.55 மணிக்கு வந்து சேரும்.

காட்பாடி - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயிலானது காட்பாடியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு காலை 10.45 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News