உள்ளூர் செய்திகள்

50 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி

Published On 2022-12-05 15:30 IST   |   Update On 2022-12-05 15:30:00 IST
  • 50 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
  • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அருகே உள்ள கல்லுட்டை கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.

இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.

5 பிரிவுகளாக, 2 நாட்களாக நடைபெற்ற போட்டி இன்று காலை நிறைவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

மேலும் விளையாட்டின் முடிவில் முதலாவது பரிசாக 9அடி கோப்பையை ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 8 அடி கோப்பை மற்றும் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.

இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.

2 நாட்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News