உள்ளூர் செய்திகள்
மூதாட்டி கொலை வழக்கில் வாலிபரிடம் விசாரணை
- தலை, முகம் சிதைத்தபடி பிணமாக கிடந்தார்
- தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா அருகே உள்ள பாஸ்மார் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி வள்ளியம்மாள் (வயது 60).
இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி கடந்த 30-ந் தேதி ஆடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அன்று மாலை வள்ளியம்மாள் அங்குள்ள விவசாய நிலத்தில் தலை, முகம் சிதைத்தபடி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்குதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.