உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

குடியாத்தம் வனசரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

Published On 2023-05-18 13:26 IST   |   Update On 2023-05-18 13:26:00 IST
  • யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது
  • 6 குழுக்கள் அமைக்கப்பட்டது

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் சுமார் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த வனச்சரகத்தில் உள்ள பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வீ.டி.பாளையம், கொத்தூர், கதிர்குளம், கல்லப்பாடி, சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, மோடிகுப்பம், சேங்குன்றம், கொட்டாரமடுகு, உள்ளிட்ட கிராமங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

வனச்சரகத்தில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுக்குமாறு தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் யானைகளை கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள தனகொண்டபல்லி பீட், கொட்டமிட்டா பீட், சைனகுண்டா பீட், மோர்தானா பீட் ஆகிய பகுதிகளில் யானைகளை கணக்கெடுக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாட்கள் காலை முதல் மாலை வரை வனப்பகுதிகள் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் யானைகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News