உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கறிக்கோழி விவசாயிகள் சங்கத்தினர் கோழிக்குஞ்சுகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கறிக்கோழிகளை கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-08 15:23 IST   |   Update On 2022-06-08 15:23:00 IST
  • கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.
  • நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்.

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கறிக்கோழிகளை கையில் ஏந்தியபடி நூதன முறையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேரன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் லதா, மாநில பொருளாளர் வள்ளி, செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.ஒரு கிலோ கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.

கறி கோழி வளர்ப்புக்கான கூலியை அரசு விலை நிர்ணயம் செய்து தொழிலாளர்களின் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கோழிக்குஞ்சு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிப்பண்ணைகள் அமைக்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் காப்பீடு மருத்துவ காப்பீடு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News