உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சி வளாகத்தில் மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் உள்ளனர்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

Update: 2022-08-15 09:19 GMT
  • மேயர் சுஜாதா தேசிய கொடி ஏற்றினார்
  • நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வேலூர்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேயர் சுஜாதா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநகராட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர்கள் புஷ்பலதா வன்னிய ராஜா, நரேந்திரன், யூசுப் கான், மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் கணேஷ் சங்கர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகம் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் மாநகராட்சி அலுவலகம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

மேலும் மாநகராட்சி வளாகம் முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மண்டல குழு தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News