உள்ளூர் செய்திகள்

வள்ளிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி.குத்து விளக்கேற்றிய காட்சி.

அரசு கலைக்கல்லூரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறப்பு

Published On 2022-07-07 16:33 IST   |   Update On 2022-07-07 16:33:00 IST
  • எம்.பி. கதிர் ஆனந்த் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
  • விழாவில் ஏராமானோர் கலந்துகொண்டனர்.

வேலூர்:

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளிமலையில் தமிழக அரசின் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது.

இந்த ஆண்டு வள்ளிமலை அரசு பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று தொடங்கப்பட்டது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தார்.

இந்த கல்லூரியானது வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் முதற்கட்டமாக செயல்படவுள்ளது. இதில் பிகாம், பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி, உள்ளிட்ட இளங்கலை வகுப்புகள் முதற்கட்டமாக நடக்கவுள்ளது. வள்ளிமலை அரசு பள்ளியில் முதல் அமைச்சர் கலைக்கல்லூ ரியை தொடங்கி வைத்த பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன் மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News