உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் தேங்கியுள்ள காட்சி.

குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கிராமத்தில் மழை வெள்ளத்தில் விளை நிலங்கள் மூழ்கியது

Published On 2022-10-30 13:47 IST   |   Update On 2022-10-30 13:47:00 IST
  • விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
  • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் குட்டைமேடு பகுதியில் உள்ள கால்வாய் மேடுப்பகுதியில் மழைக்காலங்களில் ஊற்றுகள் மூலம் வெள்ள நீர் உற்பத்தியாகி சில கிலோமீட்டர் பயணித்து எர்த்தாங்கள் கிராம வழியாக பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும்

அதேபோல் சுற்றுப்புற பகுதியில் பெய்யும் மழைநீரும் பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும். ஆனால் ஊற்று தண்ணீரும், மழைநீரும் பெரும்பாடி ஏரிக்குச் செல்ல உள்ள வழிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அந்த மழைநீர் செல்ல வழி இல்லாமல் விளை நிலங்களுக்குள் புகுந்து பல நாட்களாக தேங்கி நிற்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் இதேபோல் எர்த்தாங்கல் பகுதியில் பல ஏக்கர் விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து தற்போது பெய்யும் மழையால் மழைநீர் ஆக்கிரமிப்புகளால் வெளியேற வழி இல்லாமல் விலை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து வருகிறது

இதனை தடுக்க கோரி எர்த்தாங்கல் ஒன்றிய குழு உறுப்பினரும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு துணை தலைவரான கே.கே.வி.அருண்முரளி என்பவர் வேலூர் கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் எர்த்தாங்கல் கிராமத்தில் உற்பத்தியாகும் ஊற்றுத் தண்ணீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் ஆக்கிரமிப்புகளால் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதம் ஏற்படுத்துகிறது.

மேலும் மழைநீர் செல்லும் வழியில் உள்ள கால்வாய்கள் தூர்ந்து போய்விட்டதுலும், ஆக்கிரமிப்புகளாலும் செல்ல வழியின்றி குடியிருப்புகள், நிலங்கள் காலியிடங்களில் மழை நீர் தேங்குகிறது.

இதனால் கிராம மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகளும் இடைஞ்சலும் ஏற்படுகிறது உடனடியாக அதிகாரிகள் பார்வையிட்டு ஊற்றுத் தண்ணீர் மற்றும் மழைநீர் தங்குதடையின்றி பெரும்பாடி ஏரிக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News