உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தியொட்டி பலத்த பாதுகாப்பு

Published On 2022-08-28 09:09 GMT   |   Update On 2022-08-28 09:09 GMT
  • 1,500 போலீஸ் குவிப்பு
  • ஊர்வல பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்ட அளவில் விழா தொடர்பான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், சிலைகளை கரைக்க உள்ள ஏரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதிக்கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூத்தி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

இதில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 2-ந் தேதி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விழாவை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ''மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.

அனைத்து ஊர்வல பாதையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News