உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2023-09-20 09:27 GMT   |   Update On 2023-09-20 09:27 GMT
  • சதுப்பேரி ஏரியில் கரைப்பு
  • 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

வேலூர்:

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று நடைபெற்றது.

வேலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டிஐஜி முத்து சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.

நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீட இயக்குனர் சுரேஷ்பாபு, அரசு ராஜா, அப்புபால் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில், சந்தா சாகிப் மசூதி, கிரு பானந்தவாரியார் சாலை, தெற்கு போலீஸ் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, பைபாஸ் சாலை வழியாக சதுப்பேரிக்கு சென்றது.

அதேபோல், மற்றொரு ஊர்வலம் கொணவட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பிற்பகல் தொடங்கியது.

சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பிரத்யேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கப்படுகின்றன.

வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று ஒரே நாளில் கரைக்கப்பட்டன.

வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா முழுவதையும் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கேமரா காட்சி பதிவை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து தேவைப்படும் இடத்தில் அறிவிப்பு செய்தனர்.

Tags:    

Similar News