உள்ளூர் செய்திகள்

வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகண்யா உமாபதி இலவசமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

வேப்பங்குப்பம் ஊராட்சியில் 100 பேருக்கு இலவச மரக்கன்றுகள்

Published On 2022-11-05 15:18 IST   |   Update On 2022-11-05 15:18:00 IST
  • பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற முயற்சி
  • சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற 100 பேருக்கு இலவசமாக மரகன்றுகள் வழங்கப்பட்டது.

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் முதன்மையான ஊராட்சியாக மாற்ற பல்வேறு விதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒன்றான பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றுவதாகும்.

இதற்காக நேற்று கர்ப்பிணி பெண்கள், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கு சுமார் 100 மரக்கன்றுகாளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி வழங்கினார்.

இதில் ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் கீரை வகை சார்ந்த மரங்கள், பழம் வகையை சார்ந்த மரங்கள், போன்றவைகள் வழங்கப்பட்டது.

மேலும் இதனையடுத்து அவர் கூறுகையில்:-

மாதம்தோறும் இலவசமாக வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அதனை யார் பாதுகாப்பாக பராமரித்து வளர்த்து வருகின்றார்கள் என பார்வையிட்டு அதில் சிறந்தவர்கள் யார் என்பதை பார்த்து அவர்களுக்கு தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News