உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முதல் - அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

Published On 2023-02-13 15:34 IST   |   Update On 2023-02-13 15:34:00 IST
  • அந்தந்த ஒன்றியங்களில் நடத்த ஏற்பாடு
  • கலெக்டர் தகவல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான வேலூர் மாவட்ட அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்க மைதானத்திற்குப் பதிலாக ஒன்றிய அளவில் நடத்தப்படுகிறது.

கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18-ந் தேதியும், குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 19-ந் தேதியும், காட்பாடியிலுள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 20-ந் தேதியும், வேலூர் டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் 25-ந் தேதியும் மற்றும் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2-6ந் தேதியும் நடைபெறவுள்ளன.

ஒன்றியத்தில் முதலிடம், இரண்டாமிடம் பெறும் 2 அணிகள் வீதம் மொத்தம் 10 அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். பிற போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் ஏதும் இல்லை.

போட்டி அட்டவணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்று வருவதற்கான சான்றிதழினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்களிடமிருந்து பெற்று போட்டி நடைபெறும் இடத்தில் தவறாது சமர்ப்பித்து கலந்து கொள்ளுதல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News