உள்ளூர் செய்திகள்
ஒடுகத்தூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு
- வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை
- மொத்தம் 33 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அணைக்கட்டு:
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
இதற்காக நிரந்தர தூய்மைப்பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், டெங்குகொசு ஒழிப்பு பணியாளர்கள் என அனைத்து மாவட்டங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுக் கும் பணி ெதாடங்கப்பட்டது.
இங்கு மொத்தம் 33 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பயிற்சி அளிக் கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் வீடு, வீடாக சென்று தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.