உள்ளூர் செய்திகள்

ஊராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு

Published On 2023-08-24 14:50 IST   |   Update On 2023-08-24 14:50:00 IST
  • வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்
  • மறைமுக தேர்தல் நடந்தது

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக 8-வது வார்டு உறுப்பினர் குப்புசாமி என்பவர் பதவி வகித்து வந்தார்.

அவர் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று மறைமுக தேர்தல் நடந்தது.

இதில் 7-வது வார்டு உறுப்பினர் ரேணு என்பவர் மட்டும் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும் அவரைத் தொடர்ந்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.

Tags:    

Similar News