உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் அடுத்த குச்சிபாளையம் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அதனை ஒட்டி பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதை படத்தில் காணலாம்.

ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விலை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது

Published On 2022-12-31 14:56 IST   |   Update On 2022-12-31 14:56:00 IST
  • விவசாயிகள் வேதனை
  • நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் உள்ள ஏரி, குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலை பகுதிகள் தற்போது வரை நிரம்பி வருகிறது.

இந்நிலையில், ஒடுகத்தூர் அடுத்த குச்சிபாளையம் கிராம பகுதிகளில் உள்ள பெரிய ஏரிக்கு மலைப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள நீருற்று பிச்சாநத்தம், கீழ்கொத்தூர், வரதலம்பட்டு, கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம் போன்ற கிராமங்கள் வழியாக கானாற்று படுகையில் இருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த, ஒரு வார காலமாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஏரி முழு கொள்ளளவு எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால், ஏரி அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்து. அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

மேலும் பயிரிடப்பட்டு 3 மாதங்கள் பாதுகாத்து வந்த பயிர்கள் அருவடை நேரத்தில் நீரில் மூழ்க்கி இருப்பதைப் பார்த்து விவசாயிள் மன உளைச்சல் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் சேதமான பயிர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News