மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஜனனீ சதீஷ்குமார்அன்னதானம் வழங்கிய காட்சி.
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அன்னதானம்
- வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்தது
- மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஜனனீ சதீஷ்குமார் வழங்கினர்
வேலூர்:
வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
அலங்கரிக்கப்பட்டிருந்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், தகவல் தொழில்நுட்பபிரிவு வேலூர் மாவட்ட செயலாளர் வி.எல்.ராஜன், பகுதி செயலாளர் நாகு, குப்புசாமி, அன்வர், அணி மாவட்ட செயலாளர்கள் பாலச்சந்தர், ராகேஷ், அண்ணாமலை, ரகு, மாநகராட்சி கவுன்சி லர்கள் எழிலரசன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.