உள்ளூர் செய்திகள்
200 ரேசன் கார்டுதாரர்களுக்கு தென்னை மரக்கன்று வினியோகம்
- வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு வேளாண்மை துறை சார்பில் சின்னதாமல் செரு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 200 ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச தென்னை மரக்கன்று வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை துறை இயக்குனர் விஸ்வநாதன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் டாக்டர் சுஜாதா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி பிரியா வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் 200 ரேசன் அட்டைதாரர்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர் காயத்ரி, முத்தரசி, சண்முகம், நதியா, உமா, சின்ன பாப்பா, ஜெகநாதன், பைலட் விவசாய சங்க தலைவர் ஜெகநாதன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் அனிதா நன்றி கூறினார்.