உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த பெண் குழந்தைகளுடன் தர்ணா

Published On 2023-01-03 15:46 IST   |   Update On 2023-01-03 15:46:00 IST
  • அரசு உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்
  • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

வேலூர்:

ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் நளாயினி (வயது 28) இவர் இன்று காலை அவரது 4 வயது மகன் மற்றும் ஒரு கை குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது என்னுடைய கணவர் அவர் கூறுகையில்:-

சுகதீஷ். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என்னுடைய கணவர் வேலூரில் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் மின்னூரில் உள்ள முகாமில் இருந்து வேலைக்கு சென்று வர பஸ் செலவு அதிகமாகின்றது.

இதனால் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று வேலூர் அருகே உள்ள மேல் மொணவூர் இலங்கைத் தமிழர் முகாமுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாறுதலாகி வந்து குடியேறினோம்.

அதற்குப் பிறகு அரசு சார்பில் எங்களுக்கு வழங்க க்கூடிய நிவாரண உதவித்தொகை மற்றும் அரிசி பருப்பு ஆகியவை வழங்கப்படவில்லை.

இது குறித்து கோரிக்கை விடுத்தும் உதவித்தொகை மற்றும் பொருட்கள் வழங்காமல் உள்ளனர். உடனடியாக அரசு நிவாரண தொகை மற்றும் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அவரிடம் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News