உள்ளூர் செய்திகள்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
- 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- கோஷங்களை எழுப்பினர்
வேலூர்:
தமிழ் நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கெஜராஜ் தலைமை தாங்கினார். இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான நிரந்தர வேலை விதிகள் உருவாக்குதல், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ பிரதிநிதிகள் தடையின்றி வேலை செய்ய வழிவகை செய்ய கோருதல், மருத்துவ பிரதிநிதிகள் அவர் சார்ந்த பணியிடங்களுக்கு தடையின்றி நுழைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.