உள்ளூர் செய்திகள்

மருந்து, விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-26 15:30 IST   |   Update On 2023-08-26 15:30:00 IST
  • குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் அருள், வேலூர் மாவட்ட தலைவர் கெஜராஜ், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி நாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.

8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ, பி.எப், பே சிலிப் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News