வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்தது
- 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் வரவேற்று பேசினார்.
பல சேவைகள் மையம் மற்றும் விவசாய கட்டமைப்பு நிதி திட்டத்தில் தேவையற்ற உபகரணங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்றவு கடன் சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்புதல், ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.