உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-25 16:48 IST   |   Update On 2022-08-25 16:48:00 IST
  • வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
  • மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது என வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் துரை சித்தார்த்தன், புதிய சிந்தனையாளன் ஆசிரியர் வாலாஜா வல்லவன், மக்கள் தமிழகம் கட்சி பொதுச் செயலாளர் செவ்வேள், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் காஞ்சி அமுதன், புரட்சிகர இளைஞர் முன்னணி செந்தமிழ் முருகன் உட்பட பலர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அரிசி, தயிர் போன்ற உணவு பண்டங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழ்நாட்டினரை வேலைக்கு அமர்த்த வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாகக் கூடாது. மாநிலங்களின் உரிமை களை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

Similar News