உள்ளூர் செய்திகள்

ரேசன் கடையை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி. அருகில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ெஜகத்ரட்சகன் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்.

மோசமான தெருக்களை மாநகராட்சி சீரமைக்க வேண்டும்

Published On 2023-11-03 13:45 IST   |   Update On 2023-11-03 13:45:00 IST
  • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
  • சேண்பாக்கத்தில் புதிய ரேசன் கடை திறப்பு

வேலூர்:

வேலூர் சேண்பாக்கம் திடீர் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-

வேலூர் மாநகராட்சியில் சேண்பாக்கம் பகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வருகிறது. இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணிகளை செய்ய வேண்டும்.

எனக்கு காவேரி, தாமிரபரணி பிரச்சினைகள் உள்ளன. காவேரி பிரச்சினை தலைக்கு மேல் உள்ளது. அதனால் என்னால் இந்த பகுதிக்கு சரியாக வர முடியவில்லை.

ஆனாலும் புகைப்படங்கள் மற்றும் பொதுமக்கள் தரும் தகவல் மூலம் இந்த பகுதியை கண்காணித்து பணிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

சேண்பாக்கம் பகுதியில் தெருக்கள் மோசமாக உள்ளன. மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேண்பாக்கம் பாலாற்றில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

அதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இவர் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News