உள்ளூர் செய்திகள்
ரூ.27 லட்சத்தில் மாணவர்களுக்கான சமையல் கூடம்
- நகர மன்ற தலைவர் அடிக்கல் நாட்டி ெதாடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சமையல் கூடம் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கலந்துகொண்டு புதிய சமையல் கூடத்திற்கான கட்டிடப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர், திமுக மாணவர் அணி துணை மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் சுந்தர், திமுக வர்த்தக அணி நகர அமைப்பாளர் ஆர்.ஜி.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.