உள்ளூர் செய்திகள்

வேலூர் செண்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

வேலூர் சேண்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-29 16:00 IST   |   Update On 2022-12-29 16:00:00 IST
  • கருணை அடிப்படையில் பணி நிரந்தரம்
  • பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்

வேலூர்:

வேலூர் அடுத்த மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 24). இவர் வேலூர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மின் கம்பத்தில் பகுதி நீக்கிய போது திடீரென மின்சாரம் பாய்ந்து அவரது வலது கை துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குமாரை கருணை அடிப்படையில் பணி நிரந்தரம். செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News