உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.

பைக் திருடிய கட்டிட தொழிலாளி கைது

Published On 2022-08-18 09:47 GMT   |   Update On 2022-08-18 09:47 GMT
  • 11 வாகனங்கள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தொடர் பைக் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கர், ஏட்டுகள் பழனி, மோசஸ் கொண்ட தனிப்படையினர் பைக் திருட்டு சம்பவங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 26) என்பதும் கட்டிட தொழிலாளி என்பதும் பகலில் கட்டிட வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

இதனையடுத்து மோகன்ராஜ் அளித்த தகவலின் பேரில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் அவரிடம் இருந்து மீட்டனர்.

மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மோகன்ராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News