உள்ளூர் செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக்கா ராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட காட்சி.

காட்பாடியில் காங்கிரசார் ரெயில் மறியல்

Published On 2023-04-15 15:04 IST   |   Update On 2023-04-15 15:04:00 IST
  • ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து வேலூர் காங்கிரஸ் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்கா ராமன் தலைமையில் காங்கிரசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்திற்கு எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் சித்தரஞ்சன் முன்னிலை வகித்தார்.

சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்தும், ஒரு சில கட்சி நிர்வாகிகள் ரெயிலின் மீது ஏறி நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் காட்பாடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதனால் ரெயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. மறியலில் மண்டல தலைவர் ரகு ஐ.என்.டி. யு.சி மாவட்ட தலைவர் பிரேம்குமார், பொது குழு உறுப்பினர்கள் கப்பல் மணி கணேஷ் மனோகர் மதியழகன் ஹரி இளங்கோ வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News