உள்ளூர் செய்திகள்
மகன், மருமகள் அடித்து துன்புறுத்துவதாக கலெக்டரிடம் புகார்
- உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு
- வீட்டுமனை பத்திரத்தை மீட்டு தர வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம், அருகந்தம் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று மக்கள் குறை தேர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகளும் மருமகளும் சேர்ந்து வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். மேலும் அசல் வீட்டு மனை பத்திரத்தை எடுத்துக்கொண்டு ஜெராக்ஸ் காப்பியை எங்களிடம் கொடுத்தனர்.
இதனால் நாங்கள் இருவரும் வாடகை வீட்டில் கூட வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனவே எங்களது வீட்டுமனை அசல் பத்திரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தாயையும், தந்தையையும் அடித்து துன்புறுத்திய மகன் மற்றும் மருமகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.